நெஞ்சுக்கு நீதி – செவக்காட்டு சீமையெல்லாம் தமிழ் பாடல் வரிகள்
படம் : நெஞ்சுக்கு நீதி
பாடியவர்கள் : குரு அய்யாதுரை
பாடலாசிரியர் : யுகபாரதி, அருண்ராஜா காமராஜ்
இசை : திபு நினன் தாமஸ்
செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
அரசாண்ட நாட்ட விட்டே
நகர்ந்தாரே செல்லா காசா
பொட்டக்காட்டு புழுதிபோல
பொகபொகயா போனாரே
எல்லாத்தையும் எழந்தபொறவு
ஈமக் காட்ட சேந்தாரே
செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
பட்டாட குப்பையிலே
பல்லக்குமே வீதியிலே
எட்டூரு சுத்தி வந்தோம்
பட்டினிக்கு சோறுயில்லே
கண்போக காட்சியில்லே
கால்போக ஊருமில்லே
மண்ணாகிப் போனபின்னே
மானிடருக்கு சாதியில்லே
பஞ்சாங்க நூலூ தான்
பள்ளம் தோண்டுதே
அன்னாடங்காய்ச்சிய
குத்திச்சாய்க்குதே
கொட்டுற தெய்வம் கூறய பியிச்சி
கொட்டுன்தானே சொன்னாங்க
கூரயுமில்லா வீட்டுல வாழும்
எங்களை எதுக்கு கொன்னாங்க
செவக்காட்டு சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
மும்மாரி பெய்யுதுங்க
மூணுபோகம் விளையுதுங்க
ஒப்பாரி வைக்கும் சனம்
ஒசர வழி தெரியலைங்க
முள்ளோடு பூவிருக்கு
முத்தத்துல நெலவிருக்கு
கல்லான கடவுளுக்கே
கருணை அது எங்கிருக்கு
கற்பூரம் ஏத்தியும்
கண்ணை காட்டலே
நெய்சோற போட்டுமே
மண்ணக் காக்கல
பொய்யில உண்மை பொசுங்கிபோக
எத்தன சட்டம் அம்மாடி
நீதிய காசுக்கு வாங்குற மனுசன்
நிக்கிறான் பாரு முன்னாடி
செவக்காட்டு சீமையெல்லாம்
சீமையெல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா
அரிச்சந்திரா ராசா
அரசாண்ட நாட்ட விட்டே
நாட்ட விட்டே
நகர்ந்தாரே செல்லா காசா
பொட்டக்காட்டு புழுதிபோல
பொகபொகயா போனாரே
எல்லாத்தையும் எழந்தபொறவு
ஈமக் காட்ட சேந்தாரே
அரிச்சந்திரா ராசா
Nenjuku Needhi – Sevakkaattu Seemaiellaam Tamil Song Lyrics
Movie : Nenjuku Needhi
Singer : Guru Ayyadurai
Lyrics : Yugabharathi, Arunraja Kamaraj
Music : Dhibu Ninan Thomas
Sevakkaattu Seemaiellaam
Aandaare Harichandra Rasa
Arasanda Natta Vitte
Nagarnthare Sella Kaasa
Pottakkattu Puzhuthipole
Pogapogaya Ponare
Ellathaiyum Elaznthaporavu
Eemakkatta Senthare
Sevakkaattu Seemaiellaam
Aandaare Harichandra Rasa
Pattada Kuppaiyele
Pallakkume Veethiyele
Ettooru Suthi Vanthom
Pattinikku Soruyille
Kanpoga Katchiyille
Kaalpoga Oorumille
Mannagi Ponapinne
Manidarukku Sathiyille
Panjanga Noolu Than
Pallam Thonduthe
Annadangaichiya
Kuthi Saikkuthe
Kottura Theivam Kooraiya Pichi
Kottunnu Thaane Sonnanga
Kooraiyumilla Veetla Vaazhum
Engalai Ethukku Konnanga
Sevakkaattu Seemaiellaam
Aandaare Harichandra Rasa
Mummari Peyyuthunga
Moonu Pogum Vilaiyuthunga
Oppari Vaikkkum Sanam
Osara Vazhi Theriyalainga
Mullodu Poovirukku
Muthathula Nelavirukku
Kallana Kadavulukke
Karunai Athu Engirukke
Karpooram Ethiyum
Kannai Kaatale
Neisora Pottume
Mannaik Kakkala
Poyyil Unmai Posungipoga
Ethana Sattam Ammadi
Neethiya Kasukku Vangura Manushan
Nikkuran Paru Munnadi
Sevakkaattu Seemaiellaam
Seemaiellaam
Aandaare Harichandra Rasa
Harichandra Rasa
Arasanda Natta Vitte
Natta Vitte
Nagarnthare Sella Kaasa
Pottakkattu Puzhuthipole
Pogapogaya Ponare
Ellathaiyum Elaznthaporavu
Eemakkatta Senthare
Harichandra Rasa